மூன்று வருடங்களுக்கு மின்வெட்டு தொடரும்! – வெளியான அறிவிப்பு
23 view
குறைந்தது இன்னும் மூன்று வருடங்களுக்கு நாட்டில் மின்வெட்டு தொடரும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டின் மின்சாரத் தேவைக்கு போதுமானளவு உற்பத்தி செய்யவில்லை. தற்போதைய தேவை ஒரு நாளைக்கு சுமார் 2,800 மெகாவாட் (MW) ஆகும். எனினும், அனல் மின், காற்றாலை மின், சோலார் மூலம் மின் விநியோகத்தை அதிகரிக்கும் வரை, மின்வெட்டு தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்நியச் செலாவணி நெருக்கடியால் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெப்ரவரி 22ம் திகதி முதல் இலங்கையில் நாளாந்த மின்வெட்டு தொடர்வதாக ரஞ்சித் தெரிவித்தார். நிலைமையை எளிதாக்க அவசர முயற்சியாக அரசாங்கம் அதன் சோலார் பேனல் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், சூரிய சக்தியை சேமித்து வைப்பதற்கு…
The post மூன்று வருடங்களுக்கு மின்வெட்டு தொடரும்! – வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூன்று வருடங்களுக்கு மின்வெட்டு தொடரும்! – வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
