யாரைச்சொல்லி நோவது – சஜன் செல்லையா
29 view
யாரைச்சொல்லி நோவது – சஜன் செல்லையா நேற்றைய தினம் (15/06/2022) மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரதுறை சார் ஊழியர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் சென்றதாகவும் அங்கு பல மணிநேரமாக காத்திருந்த மக்களின் எதிர்ப்பு காரணமாக எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் ஒரு காணொளி காணக்கிடைத்தது. அத்துடன் தாம் அத்தியாவசிய சேவையாளர்கள் எனவும் தொடர்ச்சியாக பல மணிநேரம் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டு தமது கடமைக்கு சமூகமளிப்பது சிரமம் எனவும் இதை பொதுமக்கள் உணர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், அதிகாரிகளும் பாதுகாப்பு பிரிவினரும் வழிமுறைகளை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும், இல்லையெனில் எதிர்வரும் நாட்களில் சுகாதாரத்துறையினர் கடமைகளுக்கு செல்லமுடியாமல் போனால் பிணிச்சாவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை தொனி கலந்த தமது நிலைப்பாட்டை மிகத்தெளிவாக கூறியிருந்தார். அந்த சுகாதார உத்தியோகத்தரின் அனைத்து விடயங்களும் ஏற்புடையவையே, மாற்றுக்கருத்துக்கிடமில்லை. மறுக்கவும் முடியாத ஜதார்த்த விடயங்களே. ஆனாலும், தற்போதைய நாட்டு சூழ்நிலை யாவரும் அறிந்ததே, அனைத்து மக்களும்…
The post யாரைச்சொல்லி நோவது – சஜன் செல்லையா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாரைச்சொல்லி நோவது – சஜன் செல்லையா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
