கிளிநொச்சி தெற்கு வலயத்தின் நிர்வாக சீர்கேடு – ஆசிரியர் சங்கம் கண்டனம்!
36 view
கிளிநொச்சி தெற்கு வலயத்தின் நிர்வாக சீர்கேடு தொடர்பில் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆரம்பக் கல்வி மற்றும் விசேட கல்வி ஆசிரியர்களுக்கு, 15.06.2022 அன்று “உட்படுத்தல் கல்வி” தொடர்பான செயலமர்வு என்னும் போர்வையில் கிளிநொச்சி தெற்கு வலயக்கல்வி அலுவலகத்தினால் தனியார் விருந்தகம் ஒன்றில் செயலமர்வொன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தபோதும் அது நடைபெற்றிருக்கவில்லை. செயலமர்வு நிறுத்தப்பட்டமை தொடர்பாக ஆசிரியர்களிற்கு அறிவிக்கப்பட்டிருக்கவு மில்லை. அறிவிக்கப்படாததன் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து அதிக பணம் செலவழித்துச் சென்ற ஆசிரியர்களை குறிப்பிட்ட விருந்தக பணியாளர்களால் செயலமர்வு இல்லை என அறிவுறுத்தப்பட்டு, ஆசிரியர்கள் திருப்பி அனுப்பபட்டுள்ளனர். இன்றைய பொருளாதார சுமைகளைத் தாங்கி, எரிபொருள் தட்டுப்பாட்டினால் எரிபொருள் நிரப்ப வழியின்றியும், வரிசையில் நின்று எரிபொருள் பெற்றும் கடினமான நெருக்கடிகளுக்கு ஆசிரியர்கள் முகம்கொடுத்துவரும் இன்றைய நெருக்கடியில் கூட, கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனையினரின் பொறுப்பற்ற செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. இந்த நிலையில் மீண்டும்…
The post கிளிநொச்சி தெற்கு வலயத்தின் நிர்வாக சீர்கேடு – ஆசிரியர் சங்கம் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சி தெற்கு வலயத்தின் நிர்வாக சீர்கேடு – ஆசிரியர் சங்கம் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
