தனக்கு வழங்கப்பட்ட உத்தரவிற்கு நீதி கோரி கூரைமேல் ஏறிய அம்பியுலன்ஸ் சாரதி !
5 view
நீதிகோரி திருகோணமலை தள வைத்தியசாலை கட்டடத்தின் கூரை மேல் அம்பியுலன்ஸ் சாரதியொருவர் ஏறி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றமானது முறையற்ற விதத்தில் சட்டத்துக்கு முரணான முறையில் தன்னை வேறொரு வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் திருகோணமலை தள வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராகவும் தனது இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு கோரியும் குறித்த நபர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கெமுனு துமிந்த திலக (வயது – 42) என்ற அம்பியுலன்ஸ் வண்டி சாரதி திருகோணமலை வைத்தியசாலையில் எட்டு வருடத்துக்கும் அதிகமாகக் கடமையாற்றி வருகின்றார். தன்மீது போதைவஸ்து பயன்பாடு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனையைத் தான் அனுபவிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில்…
The post தனக்கு வழங்கப்பட்ட உத்தரவிற்கு நீதி கோரி கூரைமேல் ஏறிய அம்பியுலன்ஸ் சாரதி ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனக்கு வழங்கப்பட்ட உத்தரவிற்கு நீதி கோரி கூரைமேல் ஏறிய அம்பியுலன்ஸ் சாரதி ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
