ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது வழங்கப்பட்ட 400 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது?
17 view
இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியா வழங்கிய 400 மில்லியன் டொலர் கடனில் ஒரு சதம் கூட பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்ததாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த நிதி முதலீட்டு செலவுகளுக்காக வழங்கப்பட்டிருந்ததுடன் இதனால், எரிபொருள் கொள்வனவு போன்ற செலவுகளுக்கு அந்த கடனை பயன்படுத்த முடியாது எனவும் தெரியவந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அந்த கடன் வழங்கப்பட்டிருந்தது. எனினும் தான் எரிசக்தி அமைச்சராக இருந்த போது அது தொடர்பாக தேடி அறிந்து பேச்சுவார்த்தை நடத்தி அந்த கடன் உதவியை 500 மில்லியன் டொலர் வரை அதிகரித்து எரிபொருள் நெருக்கடியை ஒத்தி வைத்ததாகவும் உதய கம்மன்பில கூறியுள்ளார். ஒன்பது மாதங்களுக்கு முன்னர் எனது இந்திய நண்பர் ஒருவரும் நானும் விருந்து ஒன்றில் கலந்துக்கொண்டோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவாகிய பின்னர், இந்தியாவுக்கு சென்ற நேரத்தில்…
The post ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது வழங்கப்பட்ட 400 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது வழங்கப்பட்ட 400 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
