திருகோணமலை அம்பியுலன்ஸ் சாரதியின் துணிகர செயல் (படங்கள்)
13 view
திருகோணமலை தள வைத்தியசாலை கட்டடத்தின் கூரை மேல் ஏறி அம்பியுலன்ஸ் வண்டி சாரதியொருவர் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார். தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றமானது முறையற்ற விதத்தில் சட்டத்துக்கு முரணான முறையில் தன்னை வேறொரு வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை தள வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராகவும் தனது இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு கோரியும் குறித்த நபர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கெமுனு துமிந்த திலக (வயது – 42) என்ற அம்பியுலன்ஸ் வண்டி சாரதி திருகோணமலை வைத்தியசாலையில் எட்டு வருடத்துக்கும் அதிகமாகக் கடமையாற்றிய நிலையில் தன் மீதான பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுக் குறித்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனையைத் தான் அனுபவிக்கத் தயாராக இருப்பதாகவும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் சரியான நீதி கிடைக்க வேண்டும் எனவும் தனது முறையற்ற இடமாற்றத்தை ரத்து செய்யுமாறும் இதன்போது…
The post திருகோணமலை அம்பியுலன்ஸ் சாரதியின் துணிகர செயல் (படங்கள்) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலை அம்பியுலன்ஸ் சாரதியின் துணிகர செயல் (படங்கள்) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
