இந்திய இராணுவத்திற்கு புதிய பரிணாம திட்டம் அறிமுகம்!
15 view
உலக வல்லரசுகளோடு போட்டி போடும் அளவிற்கு வளர்ச்சி பெற்று வரும் இந்திய பாதுகாப்புத் துறையின் அபிவிருத்தியில் தற்போது புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஆலோசனையின் கீழ், ‘அக்னிபாத்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேற்படி திட்டத்தின் மூலம் தற்போதுள்ள இராணுவத்தின் மேலதிக அழுத்தங்களை குறைக்க முடியும் எனவும், இந்த திட்டம் நிரந்தரமான ஒரு திட்டமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங், “இத்திட்டம் இந்திய பாதுகாப்பு இராணுவத்தின் புதிய பரிணாமம் என்று சொல்லக் கூடிய வகையில் அமையப் பெற்றிருக்கின்றது. தற்போதுள்ள பாதுகாப்பு படைகளின் மேலதிக சுமைகளை இலகுவாக்கும் எண்ணத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இத்திட்டமானது இந்திய இராணுவத்தை பலப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய இராணுவத்தின் மொத்த எண்ணிக்கையை பதின்மூன்று லட்சமாக வைத்திருக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுவதால் இத்திட்டம் அதற்கு கைகொடுக்கும் என நாம் நம்புகின்றோம். அத்துடன்…
The post இந்திய இராணுவத்திற்கு புதிய பரிணாம திட்டம் அறிமுகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்திய இராணுவத்திற்கு புதிய பரிணாம திட்டம் அறிமுகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
