எமது மக்களின் சாபமே நாடு இந்த நிலைக்கு காரணம்: வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கம்
26 view
யாழ், ஜுன் 14 வலி. வடக்கில் வளம்கொழிக்கும் விவசாயப் பூமிகளை ஆக்கிரமித்து இன்னமும் தம் வசம் படைத்தரப்பு வைத்துள்ளது. அந்தக் காணிகளுக்குச் சொந்தக்காரரான எமது மக்கள் அழுது அழுது ஏங்கிய கண்ணீர் அவர்களின் சாபங்கள்தான் நாட்டின் இந்த நிலைமைக்குக் காரணம். இப்போதாவது அவர்களின் காணிகளை விடுவித்து சாபவிமோசனம் அடையுமாறு கோருகின்றோம் என வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் தலைவர் அ.குணபாலசிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த நாட்டின் ஒரு பகுதி மக்களே, 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலிகாமம் வடக்கிலிருந்து விரட்டப்பட்டனர். சொந்த மண்ணுக்குச் செல்வோம் என்ற அவர்களின் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமாகி 32 வருடங்கள் நிறைவுறுகின்றன. பாதுகாப்புப் படைகள் வல்வந்தமாகக் கைப்பற்றிய எமது பூமியில் 6 ஆயிரத்து 500 ஏக்கரை நிரந்தரமாக கபளீகரம் நோக்குடன் 2013ஆம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எமது போராட்டங்களாலும், தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றத்தாலும்…
The post எமது மக்களின் சாபமே நாடு இந்த நிலைக்கு காரணம்: வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எமது மக்களின் சாபமே நாடு இந்த நிலைக்கு காரணம்: வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
