உண்மையை சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு தமிழ் தேசத்தை அங்கீகரிக்க வேண்டும்! கஜேந்திரகுமார் எம்.பி. கோரிக்கை
5 view
சொந்த தேசத்தினை சூறையாடி தங்களுக்கான நலன்களை மட்டும் தேடிய தலைமைத்துவங்கள் 74 வருடங்களுக்குப் பின்னர் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த உண்மையினை சாதாரண சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு தமிழ்த் தேசத்தினை அங்கீகரிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு – படுவான்கரை பகுதியை உலுக்கிய மகிழடித்தீவு படுகொலை நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி இறால் வளர்ப்பு பண்ணையில் இடம்பெற்ற படுகொலையும், 1992 ஆம் ஆண்டு ஜூன் 12ம் திகதி இடம்பெற்ற மகிழடித்தீவு படுகொலையும் சேர்த்து ஏறக்குறைய 180பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களை நினைவுகூரும் வகையில் வருடாந்தம் இந்த நினைவு தினம் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் பங்களிப்புடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்த் தேசிய…
The post உண்மையை சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு தமிழ் தேசத்தை அங்கீகரிக்க வேண்டும்! கஜேந்திரகுமார் எம்.பி. கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உண்மையை சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு தமிழ் தேசத்தை அங்கீகரிக்க வேண்டும்! கஜேந்திரகுமார் எம்.பி. கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
