வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை நிராகரிப்பு; புலம்பெயர் சமூகத்திற்கு விசேட அழைப்பு
47 view
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் மீண்டும் நிராகரித்துள்ளது. இந்த பொறிமுறையானது துருவப்படுத்துவதற்கும் பிளவுபடுத்துவதற்கும் மட்டுமே உதவும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் எச்சரித்துள்ளார். ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார். இந்த பேரவை மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் வளங்களை செயற்றிறன் அற்ற மற்றும் பயனற்ற விடயத்திற்கு பயன்படுத்துவதாகவே அமையும் எனவும், நாட்டின் நலனுக்காக புலம்பெயர் சமூகத்துடனும், குடிசார் சமூக அமைப்புகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் தெரிவித்துள்ளார். 46 இன் கீழ் ஒன்று தீர்மானமானது தமது அரசாங்கத்தினதும் பேரவையின் ஏனைய நாடுகளினதும் அனுமதியின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று எனவும் கூறியுள்ளார். நாட்டின் சவாலான சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள்…
The post வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை நிராகரிப்பு; புலம்பெயர் சமூகத்திற்கு விசேட அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை நிராகரிப்பு; புலம்பெயர் சமூகத்திற்கு விசேட அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
