பாம்பு தீண்டினால்கூட சிகிச்சையளிப்பதற்கு மருந்துகள் இல்லாத நிலையில் நாடு!
4 view
பாம்பு தீண்டினால் சிகிச்சையளிப்பதற்கு மருந்துகள் இல்லை. எனவே பாம்பு தீண்டினால் மரணம் மட்டுமே மிஞ்சும் என்று வைத்தியர்கள் கூறும் நிலைமை தற்போது நாட்டில் உருவாகியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். மத்துகம பிரதேசத்தில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த மக்களுக்கும் உறுதியற்ற தன்மையுடன் வாழும் நிலைமையே இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. பலபொருள் அங்காடிகளுக்குச் சென்று சிலர் கையிலிருக்கும் பணத்தை கொடுத்து கூடிய மட்டத்தில் அரிசியை சேமிக்கின்றனர். இன்னும் ஒரு மாதம் செல்லும்போது நாட்டில் மூன்று வேளையும் உணவு உண்ண முடியாத நிலைமை ஏற்படும் எனவே இரண்டு வேளை உண்பதற்கு தயாராகுங்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். எனவே நாட்டு மக்கள் கையிலிருக்கும் பணம் அனைத்தையும் கொண்டு சென்று அரிசியை வாங்கி வீடுகளில் சேமித்து வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் ஆகும்போது 170,000 இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு…
The post பாம்பு தீண்டினால்கூட சிகிச்சையளிப்பதற்கு மருந்துகள் இல்லாத நிலையில் நாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாம்பு தீண்டினால்கூட சிகிச்சையளிப்பதற்கு மருந்துகள் இல்லாத நிலையில் நாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
