நாங்கள் பௌத்தத்தை மதிக்கிறோம்; அதற்காக சிங்கள ஆக்கிரமிப்புகளை ஏற்றுகொள்ள முடியாது! செ.கஜேந்திரன்
35 view
பௌத்த மதத்தை மதிக்கிறோம் ஆனால் பௌத்தத்தின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புகளை, ஒரு போதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். குருந்தூர் மலையில் விகாரை வைப்பதற்கு எதிராக நேற்றையதினம் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், குமுழமுனை பிரதேசத்தில் இருக்கக்கூடிய குருந்தூர் மலை பகுதியிலே சட்டத்துக்கு முரணாக தொல்பொருள் அகழ்வு செய்யப் போவதாகக் கூறி ஆரம்பிக்கப்பட்ட பணிகளை தொடர்ந்து சட்டவிரோதமான முறையிலே விகாரை ஒன்றை அமைக்கின்ற வேலைகளிலே தொல்லியல் திணைக்களமும், பௌத்த மத பீடங்களும் இணைந்து ஈடுபட்டிருந்தார்கள். பூஜை வழிபாடுகளுடன் அந்த கோபுரத்திற்குரிய கட்டுமானங்களை ஆரம்பிக்கின்ற நிலையிலே மக்கள் இணைந்து இந்த செயற்பாடு சட்ட விரோதமான செயற்பாடு. குருந்தூர் மலையானது பல ஆயிரம் வருடங்கள் தமிழர்களுடைய பழமையான வரலாற்றோடு அரசாட்சி புரிந்த இடம். இங்கே சைவ, தமிழ் அடையாளங்கள் ஏற்கனவே புதைந்து கிடந்தது…
The post நாங்கள் பௌத்தத்தை மதிக்கிறோம்; அதற்காக சிங்கள ஆக்கிரமிப்புகளை ஏற்றுகொள்ள முடியாது! செ.கஜேந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாங்கள் பௌத்தத்தை மதிக்கிறோம்; அதற்காக சிங்கள ஆக்கிரமிப்புகளை ஏற்றுகொள்ள முடியாது! செ.கஜேந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
