குருந்தூர் மலையில் புத்தரின் சிலையை வைத்து வழிபட முயற்சி – அன்ரனி ஜேசுதாசன்கண்டனம்
16 view
தமிழர்கள் பாரம்பரியமாக வழிபட்ட குருந்தூர் மலையில் சிவன் வழிபாடு இருந்த இடத்திலே பலாத்காரமாக புத்தரின் சிலையை வைப்பதற்குஅகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலைப்பகுதி தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு இனங்காணப்பட்ட தொல்பொருள் இடத்தில் புதிதாக விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த விகாரையின் சிறப்பு வழிபாடு ஒன்றினை மேற்கொள்ள தென்னிலங்கையில் இருந்து பௌத்த மதகுருமார்கள், மக்கள் என பலர் நேற்று வருகைதந்தபோது எதிர்ப்பு ஆர்ப்பாட்டகாரர்களின் நடவடிக்கையினால் இந்த வழிபாடுகள் கைவிடப்பட்டன. இந்த சம்பவம் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலையில் நடைபெற்ற சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்கள் பாரம்பரியமாக வழிபட்ட குருந்தூர் மலையில் சிவன் வழிபாடு இருந்த இடத்திலே பலாத்காரமாக புத்தரின் சிலையை வைப்பதற்கு தென்னிலங்கையிலிருந்து குழுவாகச் சென்று…
The post குருந்தூர் மலையில் புத்தரின் சிலையை வைத்து வழிபட முயற்சி – அன்ரனி ஜேசுதாசன்கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குருந்தூர் மலையில் புத்தரின் சிலையை வைத்து வழிபட முயற்சி – அன்ரனி ஜேசுதாசன்கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
