பைசர் தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான செய்தி
15 view
கொழும்பு,ஜுன் 12 நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 8 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் காலாவதியாகவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 20 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்காக, 14 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. எவ்வாறிருப்பினும், 20 வயதிற்கு மேற்பட்டவர்களில், 54 சதவீதமானோர் மாத்திரமே இதுவரையில் மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, எஞ்சியுள்ள 8 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள், அடுத்த மாத முற்பகுதியில் காலாவதியாக உள்ளதென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
The post பைசர் தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான செய்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பைசர் தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான செய்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
