மின் உற்பத்தியில் தடங்கல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் அம்பலம்!
31 view
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் கடந்த சில மாதங்களாக மின் விநியோக தடையும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தயாராகிய வேளை நாட்டில் தொடர் மின்வெட்டு அமுல் படுத்தப்படகூடுமோ என மக்கள் அஞ்சி இருந்த நிலையில் குறித்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மின்தடையினை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு பல குழுக்கள் திட்டமிட்டு செயற்படுவதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மின்சார உற்பத்தியில் தடங்கல் ஏற்படுத்தும் வகையில் விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இருந்து முறைகேடாக நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நாசகார செயற்பாட்டின் மூலம் மின் உற்பத்தி இயந்திரங்களுக்குள் செலுத்தப்படாத நிலையில் சுமார் இரண்டு மணிநேரம் நீர் வெளியேற்றப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த செயற்பாடானது நீர்மின் உற்பத்தியின் செயற்பாட்டை துண்டித்து மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் நாசகார நடவடிக்கை…
The post மின் உற்பத்தியில் தடங்கல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் அம்பலம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின் உற்பத்தியில் தடங்கல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் அம்பலம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
