பசில் கௌரவமான முறையில் எம்.பி. பதவியை துறந்துள்ளமை வரவேற்கத்தக்கது! – வாசுதேவ
4 view
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை விவகாரத்தை தோற்கடிக்க பஷில் ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து அரசியலமைப்பின் ஊடாக வெளியேற்றப்படுவதற்கு முன்னர் அவர் கௌரவமான முறையில் பாராளுமன்ற உறுப்புரிமையை துறந்துள்ளமை வரவேற்கத்தக்கது. அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் பெருமளவில் வெற்றிப்பெற்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமையுடைய நபர் அரசியலில் செல்வாக்கு செலுத்த தகுதியற்றவர் என்ற ஏற்பாடு உள்வாங்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. 21ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமையுடைய நபருக்கு தடை விதிக்கும் வகையிலான திருத்தத்தை இரத்து செய்ய பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததை தொடர்ந்தே அவர் 21ஆவது திருத்தம் ஊடாக வெளியேற்றப்படுவதற்கு முன்னர் கௌரவமான முறையில் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்துள்ளார். அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களில் பெரும்பாலான அதிகாரங்கள்…
The post பசில் கௌரவமான முறையில் எம்.பி. பதவியை துறந்துள்ளமை வரவேற்கத்தக்கது! – வாசுதேவ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பசில் கௌரவமான முறையில் எம்.பி. பதவியை துறந்துள்ளமை வரவேற்கத்தக்கது! – வாசுதேவ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
