யாழில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
35 view
யாழ்ப்பாணம்,ஜுன் 11 யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் யாழ்ப்பாணம், திருநெல்வேலி பிரதேசத்தில் 30இற்கு மேற்பட்ட வியாபார நிறுவனங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த ஐந்து விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் நூடில்ஸ் மற்றும் பிஸ்கட் வகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக இரண்டு விற்பனை நிலையங்களும் மொத்தமாக ஏழு வியாபார நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதென பாவனையாளர் அதிகார சபை உத்தியோகத்தர்களால் அறிக்கையிடப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் பரிசோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெறுமென அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
The post யாழில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
