அனைவருக்கும் சமமான சுகந்திர சூழல் வேண்டும்! யாழில் நடைபவனி
34 view
யாழில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் LGBTIQA + சமூகத்தினரின் வானவில் நடைப்பயணத்தில் கலந்துகொண்டர்களில் சிலர் குறித்த சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் ஒழிக்கப்பட்டு, அனைத்து மனிதர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் எமது சமூக ஊடகத்துக்கு கருத்து தெரிவித்திருந்தனர். அந்தவகையில் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், மனிதர்கள் அனைவரும் சமத்துவம் மிக்க உரிமைகளை அனுபவிப்பதற்கு ஏதுவானவர்களே. எந்த விதமான பாரபட்சமின்றி அனைவரும் அனைத்து விதமான மனித உரிமைகளும் சுதந்திரமாக அனுபவிப்பதற்கு ஒரு சூழல் உருவாக்கப்பட வேண்டும். இதுவே சமூக ,கலாசார ,பண்பாட்டு ,சமய ,இனம் என பல்வேறு வரையறைகளுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்துடனான நடைப்பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம் LGBTIQA + சமூகத்தினரை சமூகத்தில் இழிவாக பார்க்கின்ற தன்மை , அவர்களின் சுயமரியாதை மறுக்கப்படல் ,பொது இடங்களில் துஸ்பிரயோகங்களில் உட்படுத்துதல் போன்றன இடம்பெறுகின்றன. இது தவிர ,தமிழ் பேசும் சமூகத்தில் ,வீட்டு வசதி,மருத்துவ செலவுகள் ,சொந்த குடும்பங்களில் ஏற்படுகின்ற பிரச்சனைகள், வேலை இடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்,பகிடிவதைகள் போன்றவற்றால் இவர்கள்…
The post அனைவருக்கும் சமமான சுகந்திர சூழல் வேண்டும்! யாழில் நடைபவனி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனைவருக்கும் சமமான சுகந்திர சூழல் வேண்டும்! யாழில் நடைபவனி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
