அரசியல் நெருக்கடிக்கு பொதுத் தேர்தலே ஒரே தீர்வு! ஜே.வி.பி
14 view
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண பொதுத் தேர்தலை நடத்துவதே ஒரே வழி என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. தேர்தலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். தலத்துஓயாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய சூழல் தேர்தலை நடத்துவதற்கு ஏற்றதல்ல என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையையும் அவர் விமர்சித்துள்ளார். நாட்டில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கும் பொருளாதார பிரச்சினைகளை சரிசெய்வதற்கும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை தேர்தலின் மூலம் தீர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை கலைத்து புதிய அரசாங்கத்தை உருவாக்குமாறு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலை நடத்த முடியாது என்ற தேர்தல் ஆணையாளரின் கருத்துக்களை நிராகரித்த அவர் , தனது தனிப்பட்ட…
The post அரசியல் நெருக்கடிக்கு பொதுத் தேர்தலே ஒரே தீர்வு! ஜே.வி.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல் நெருக்கடிக்கு பொதுத் தேர்தலே ஒரே தீர்வு! ஜே.வி.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
