சுற்றுலாப் பயணிகளை கவர திட்டங்களை கண்டறியுங்கள் – ஜனாதிபதி பணிப்பு

32 view
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான புதிய அணுகுமுறைகளைக் கண்டறிய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சுற்றுலாத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா தொற்றுநோயால் முடங்கியிருந்த சுற்றுலாத் துறை, மீட்சியடைந்தாலும் நெருக்கடியில் தள்ளாடிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். தேசிய பொருளாதாரம் மற்றும் பெருமளவிலான வேலை வாய்ப்பை பாதிக்கும் ஒரு முக்கியமான துறையாக இருப்பதால், அதை விரைவாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என கூறினார். அத்தோடு வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் கொண்டிருக்கும் நாட்டைப் பற்றிய தவறான தகவல்களை திருத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். மேலும் சுற்றுலாத்துறையில் ஈடுபடும் மக்கள் எதிர்நோக்கும் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் ஜனாதிபதி…
The post சுற்றுலாப் பயணிகளை கவர திட்டங்களை கண்டறியுங்கள் – ஜனாதிபதி பணிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース