கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! யாழ். அரச அதிபர் எச்சரிக்கை
32 view
யாழ்.மாவட்டத்தில் அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பொருட்களுக்கான விலை அதிகரித்த நிலைமை காணப்படுகின்றது. பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை மிகவும் நியாயமான விலையில் வழங்க வேண்டும். அதே நேரத்தில் தற்போது அரசாங்கம் அரிசிக்குரிய கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயித்துள்ளது. அந்த நிர்ணயவிலைக்கு உட்பட்ட வகையில் பொருட்களினை விற்கவேண்டும். சில்லறை விற்பனையாளர்ளும் இந்த விடயத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டும். அதிக விலைக்கு அரிசியை விற்று பாவனையாளர்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கவேண்டாம். அதே நேரத்தில் அரசாங்கம் நிர்ணயித்த விலையானது நியாயமான விலையாக காணப்படுகின்றது. அதே நேரத்தில் எதிர்காலங்களில் யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின்…
The post கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! யாழ். அரச அதிபர் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! யாழ். அரச அதிபர் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
