சீ.வி.கே.சிவஞானம் பிரதமருக்கு எழுதிய முக்கிய கடிதம்
4 view
கொழும்பு,மே 14 முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவஞ்சலி மற்றும் பிரர்த்தனை நிகழ்வுகளில் தலையிடாதிருப்பதற்கான பணிப்புகளை முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்கு வடக்கு மாகாண அவைத் தலைவர் வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதத்தில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18 ஆம் நாளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் ஆயுதப் படையினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை கூட்டாக நினைவு கூர்ந்து அஞ்சலி செய்வது தாங்கள் நன்றாக அறிந்ததே. இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் என்ற வகையில் வன்முறையால் கொல்லப்பட்ட ஆன்மாக்களின் சாபம் பற்றி நாம் அறிவோம். இந்த நாட்டை இந்த ஆன்மாக்களின் சாபம் சுற்றி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவது தெளிவானது. கர்மவினையின் தாக்கங்களே இந்த நாட்டை தாக்குகின்றது என்பதும் தெளிவு. இந்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்வதால் அவை அமைதி பெறுகின்றன…
The post சீ.வி.கே.சிவஞானம் பிரதமருக்கு எழுதிய முக்கிய கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீ.வி.கே.சிவஞானம் பிரதமருக்கு எழுதிய முக்கிய கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
