அவசரகாலச் சட்டம் அறவே வேண்டாம்! இ.தொ.கா. வலியுறுத்து
4 view
நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலிலும் அதிலிருந்து மீள்வதற்கான உதவிகளை சர்வதேச நாடுகளிடம் இலங்கை கோரிக்கொண்டிருக்கும் தருணத்திலும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுவதானது நாட்டில் ஒரு சரியான சட்டம், ஒழுங்கு இல்லை என்பதை அரசு வெளிப்படுத்துகின்றது. இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கண்டனம் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “நாட்டில் போர் முடிவுக்கு வந்த பிறகு பல சர்வதேச நாடுகளால் அவசரக்காலச் சட்டம் இலங்கையில் தொடரக் கூடாது என்றும், அது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது. அதன் காரணமாக கடந்த காலங்களில் அவை சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக மீளப்பெறப்பட்டன. எமது நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் வரிசையில் இருந்து எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள், காஸ் உட்பட ஏனைய தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள முடியாத யுகமொன்றே உருவாகியுள்ளது. எதிர்வரும் சில மாதங்களில் இந்த நெருக்கடிகள் மேலும் அதிகரிக்கும் என்று…
The post அவசரகாலச் சட்டம் அறவே வேண்டாம்! இ.தொ.கா. வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அவசரகாலச் சட்டம் அறவே வேண்டாம்! இ.தொ.கா. வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
