இஸ்ரேலில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கத்திக்குத்து: 3 பேர் பலி
49 view
டெல் அவிவ், மே 07 இஸ்ரேல் நாட்டின் 74-வது சுதந்திர தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைக்கட்டின. அந்த வகையில் இஸ்ரேலின் மத்திய பகுதியில் அமைந்துள்ள எலாட் நகரில் உள்ள ஒரு பூங்காவில் நேற்று முன்தினம் இரவு சுதந்திர தினம் கொண்டாட்டம் நடந்தது. இதற்காக உள்ளூரை சேர்ந்த ஏராளமான மக்கள் பூங்காவில் கூடியிருந்தனர். கொண்டாட்டங்கள் நிறைவடைய இருந்த சமயத்தில் மர்ம நபர்கள் கையில் கத்தி மற்றும் கோடாரியுடன் பூங்காவுக்குள் நுழைந்தனர். அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை கத்தியால் சரமாரியாக குத்தியும், கோடாரியால் வெட்டியும் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த மர்ம நபர்கள் சற்றும் ஈவு இரக்கமின்றி அவர்களை விரட்டி சென்று கண்மூடித்தனமாக தாக்கினர். இந்த கொலை வெறி தாக்குதலில் 40 வயதுக்குட்பட்ட 3…
The post இஸ்ரேலில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கத்திக்குத்து: 3 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இஸ்ரேலில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கத்திக்குத்து: 3 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
