கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்தது இந்தியா: உலக சுகாதார அமைப்பு
5 view
ஜெனீவா, மே 05 2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக சுகாதார அமைப்பின் தகவல் படி தற்போது வரை கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 62 லட்சத்து 43 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை நாடு முழுவதும் இதுவரை 5 லட்சத்து 23 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், உலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த கொரோனா உயிரிழப்புகள் குறித்து கணித மாதிரி மதிப்பீட்டின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், கணித மாதிரி மதிப்பீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ளது. அதில், உலக அளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடு இந்தியா என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் வரை கொரோனாவால் நேரடியாகவும், மறைமுகமாகவும்…
The post கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்தது இந்தியா: உலக சுகாதார அமைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்தது இந்தியா: உலக சுகாதார அமைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
