யாழ்.நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்தில் இரு இளைஞர்கள் கைது!
4 view
யாழ்ப்பாணம் மாநகரில் வெவ்வேறு நான்கு சம்பவங்களில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை அபகரித்த கும்பலைச் சேர்ந்த இருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இளைஞர் ஒருவரிடம் 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கையடக்க தொலைபேசியை அபகரித்துச் சென்ற நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாநகரில் கடந்த ஒரு வாரத்துக்குள் 3 வெவ்வேறு சம்பவங்களில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் அபகரிக்கப்பட்டன. நூதனமான முறையில் இளைஞர்களை மறித்து தமது சகோதரியுடன் கதைப்பதாகவும் அவருடைய படத்தை பணப்பையில் (பேஸில்) வைத்திருப்பதாகவும் அச்சுறுத்திவிட்டு அவர்களிடமிருந்து அலைபேசி மற்றும் பணத்தை அபகரித்து கும்பல் தப்பித்து வந்துள்ளது. இந்த நிலையில் 4ஆவது சம்பவமாக யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் இளைஞர் ஒருவரை அதே பாணியில் அச்சுறுத்தி…
The post யாழ்.நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்தில் இரு இளைஞர்கள் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்தில் இரு இளைஞர்கள் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
