வடக்கு போராட்டத்தை காட்டி தென்னிலங்கை மக்களின் எதிர்ப்பை மழுங்கடிக்க கூடாது! மனோ எம்பி கோரிக்கை
39 view
இறுதி போர் காலத்தில் வடக்கை நோக்கி நிகழ்த்தப்பட்ட உணவு, மருந்து, மின்சாரம், வாழ்வாதார தடைகள் பற்றியும், அவற்றை அம்மக்கள் எதிர்நோக்கி வென்றது பற்றியும் இப்போது கூறி, ராஜபக்சர்களுக்கு எதிரான இன்றைய தென்னிலங்கை போராட்டத்தை மழுங்கடிக்க கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். தனது முகநூலில் பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவரது முகநூல் பதிவில், ‘இறுதிபோரை பற்றி பேசினால், ஆயுத போராட்டம் பற்றி, புலிகள் பற்றி பேச வேண்டி வரும். இதுகளை பற்றி பேசி போராட்ட களத்தில் எழுந்து வரும் தமிழ்-சிங்கள உறவை பழுதாக்க கூடாது’ என்று, “வெளிநாடு சென்று திரும்பிய பொருளாதார புலி தமிழர்” ஒருவர் சற்று முன் கூறினார். அதாவது, அமைதியாக ராஜபக்சர்களை முதலில் வெளியேற்ற வேண்டுமாம். மற்றதெல்லாம் அப்புறம் பார்த்து கொள்ளலாமாம். “என்னடா இது, மதுரைக்கு வந்த ரோதனை” என்று இந்த கொழும்பு தமிழ் எம்பிக்கு தோன்றியது. இன்றைய தென்னிலங்கை போராட்டத்துக்கு…
The post வடக்கு போராட்டத்தை காட்டி தென்னிலங்கை மக்களின் எதிர்ப்பை மழுங்கடிக்க கூடாது! மனோ எம்பி கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு போராட்டத்தை காட்டி தென்னிலங்கை மக்களின் எதிர்ப்பை மழுங்கடிக்க கூடாது! மனோ எம்பி கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
