அரசினால் டொலரின் பெறுமதிக்கு பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை-சபா.குகதாஸ் குற்றச்சாட்டு!
5 view
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையின் பின்னணியில் நாட்டின் கையிருப்பில் உள்ள டொலர் பற்றாக்குறையும் காரணமாக அமைகின்ற நிலையில் தற்போதைய டொலர் நிலையில் அரசினால் டொலரின் பெறுமதிக்கு பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை என ரெலோ இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கைத்தீவின் பொருளாதார வீழ்ச்சி ஏற்றுமதி வருமானங்களையும் ஏனைய அந்நியச் செலாவணி வருமானங்களையும் இழந்து மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ள போது டொலரின் பெறுமதி அதிகரித்ததுடன் ரூபாய் மிகப் பெறும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் உள்நாட்டில் பொருட்களின் விலைகள் டொலரின் பெறுமதியை தாண்டி பன் மடங்கு அதிகமான விலைகளுக்கு விற்கப்படுகின்றது. உதாரணமாக டொலர் 200/= ரூபாவாக இருக்கும் போது 1000/= ரூபா விலையில் இருந்த சீமெந்துப் பை ஒன்று டொலர் 350/= ரூபாவாக இருக்கும் தற்போது 2850/= ரூபாவிற்கு விற்பனையாகிறது சாதாரணமாக டொலரின் பெறுமதியில் கணித்தால் 1750/= ரூபாதான்…
The post அரசினால் டொலரின் பெறுமதிக்கு பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை-சபா.குகதாஸ் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசினால் டொலரின் பெறுமதிக்கு பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை-சபா.குகதாஸ் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
