மாற்றங்களுக்கு உறுதி பூணுவோம்
4 view
இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மக்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள காலப்பகுதி இதுவாகும். இத்தருணத்தில்தான் முஸ்லிம்களாகிய நாம் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்குத் தயாராகி வருகிறோம். உண்மையில் முஸ்லிம்கள் பெருநாளைக் கூட சந்தோசமாகக் கொண்டாடுகின்ற நிலைமை இப்போதில்லை. பொருளாதார நெருக்கடி, பொருட்களின் விலையேற்றம் காரணமாக பெருநாளைக்குத் தேவையான உணவு, உடைகளைக் கூட கொள்வனவு செய்ய முடியாத நிலையிலேயே பல குடும்பங்கள் உள்ளன. முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் உள்ள தனவந்தர்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் உதவியால் இவ்வாறான குடும்பங்களுக்கு ஓரளவு உதவிகள் வழங்கப்படுகின்ற போதிலும் அவை அவர்களது முழுமையான தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானவையல்ல என்பதுதான் யதார்த்தமாகும். இன்றைய பொருளாதார நெருக்கடியானது மக்களை சகல வழிகளிலும் பாதித்துள்ளது. செலவுகள் ரொக்கட் வேகத்தில் அதிகரித்துள்ள போதிலும் வருமானம் அதிகரிக்கவில்லை. இதன் காரணமாக குடும்பத் தலைவர்கள் பலத்த நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். பிள்ளைகளுக்குத் தேவையான பால் மாவைக் கூட வாங்குவதற்கு வசதியற்ற நிலையில் மக்கள் புலம்பித்திரிகின்றனர். பிள்ளைகளின் கல்விச் செலவுகளை…
The post மாற்றங்களுக்கு உறுதி பூணுவோம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாற்றங்களுக்கு உறுதி பூணுவோம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
