20 ஆவது நாளாக தொடரும் போராட்டம்
4 view
கொழும்பு, ஏப் 28 காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 20 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டின் பல பகுதிகளிருந்தும் வரும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வண்ணமுள்ளனர். இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவையை வெளியேறுமாறு கோரி அலரி மாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டமும் தொடர்கின்றது. மைனாகோகம என இந்த ஆர்ப்பாட்டக் களத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
The post 20 ஆவது நாளாக தொடரும் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 20 ஆவது நாளாக தொடரும் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
