பதவி விலகத் தயார் – பிரதமர் உறுதியளித்ததாக ஓமல்பே தேரர் தெரிவிப்பு!
4 view
பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரது பெயரை பரிந்துரை செய்தால் தான் பதவி விலக தயார். ஜனாதிபதியின் அதிகாரத்திற்கமைய நாட்டின் அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பதவி விலகுகிறேன், பதவி விலக தயாராகவுள்ளேன், எவ்வித பிரச்சினையும் கிடையாது. இருப்பினும் பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிக்க தாமதம் ஏற்படுமாயின் நாட்டில் அரச நிர்வாகம் இல்லாமல் போகும். இடைவெளியை நிரப்புவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும். அக்காலப்பகுதியில் நாடு முழுமையாக அழிவு நிலைக்கு செல்லும் என பிரதமர் குறிப்பிட்டார். ஜனாதிபதி வசமுள்ள நிறைவேற்று அதிகாரத்திற்கமைய நாட்டின் அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என பிரதமரிடம் குறிப்பிட்டோம். ஜனாதிபதியின் அதிகாரத்திற்கமைய நாட்டை முன்னெடுத்து செல்ல முடியாது.…
The post பதவி விலகத் தயார் – பிரதமர் உறுதியளித்ததாக ஓமல்பே தேரர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பதவி விலகத் தயார் – பிரதமர் உறுதியளித்ததாக ஓமல்பே தேரர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
