போதைப் பொருள் வழக்கு: தமிழ் இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு தூக்கு
15 view
சிங்கப்பூர்,ஏப் 27 போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த மலேசிய தமிழ் இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் சிங்கப்பூரில் புதன்கிழமை காலை தூக்கிலிடப்பட்டார். பின்னர் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவின் ஈப்போ நகரத்துக்கு நாகேந்திரன் தர்மலிங்கம் உடல் கொண்டுவரப்பட்டு நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2009ஆம் ஆண்டு 42.72 கிராம் டயாமார்ஃபைன் என்ற தடை செய்யப்பட்ட பொருளுடன் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். டயாமர்ஃபைன் பொருள் மூலமாக போதைப் பொருள் தயாரிக்க முடியும். அதேநேரத்தில் இது புற்றுநோயால் ஏற்பாடும் வலிக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் சிங்கப்பூரில் இப்பொருள் தடை செய்யப்பட்டிருக்கிறது. இப்பொருளை நாகேந்திரன் தமது தொடைப்பகுதியில் உறை ஒன்று கட்டி சிங்கப்பூருக்கு கடத்தி வந்தார் என்பது வழக்கு. இவ்வழக்கில் நாகேந்திரன் தர்மலிங்கம் குற்றவாளி என 2019-ல் தீர்ப்பளிக்கப்பட்டது. போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு மரண தண்டனை விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம். ஆனால் நாகேந்திரன் தர்மலிங்கம்…
The post போதைப் பொருள் வழக்கு: தமிழ் இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு தூக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போதைப் பொருள் வழக்கு: தமிழ் இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு தூக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
