பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக் கூடாது? உச்ச நீதிமன்றம் கேள்வி
5 view
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டுள்ள பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நிலையில் பேரறிவாளன் விடயத்தில் அடுத்த வழக்கு விசாரணையின்போது தீர்க்கமான முடிவொன்றை நீதியரசர்கள் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்தவந்த நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பேரறிவாளன், தம்மை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்ற நீதியரசர் நாகேஷ்வரராவ் தலைமையிலான அமர்வு முன்னிலையில் பேரறிவாளன் தாக்கல் செய்த இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பேரறிவாளன் தரப்பு சட்டத்தரணி மன்றிற்கு எடுத்துரைத்தார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் முன்னிலையான சட்டத்தரணியிடம், இந்த விவகாரத்தில் ஏன் தமிழக அரசு ஒரு முடிவெடுத்து பேரறிவாளனை ஏன் விடுவிக்கக்கூடாது என நீதியரசர்கள் கேள்வியை முன்வைத்தனர். எனினும் மத்திய அரசு…
The post பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக் கூடாது? உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக் கூடாது? உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
