வடமாகாணத்தில் சுகயீன விடுமுறைப் போராட்டம்
13 view
யாழ், ஏப் 27 நாடு தழுவிய ரீதியில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆதரவை தெரிவித்துள்ளது. இதனால், வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் நாளை சுகவீன விடுமுறையை அறிவித்து இப்போராட்டத்தில் பங்கெடுக்குமாறு மேற்படி சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பணிப் பகிஸ்கரிப்புத் தொடர்பாக வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு தழுவிய ரீதியில் 2022.04.28 வியாழக்கிழமை பல்வேறு தொழிற்சங்கங்களால், பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படவிருக்கும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கமாகிய நாம் கீழ் வரும் விடயங்களை முன்னிறுத்திய வகையில் கலந்து கொள்ளத் தீர்மானித்துள்ளோம். மிக நீண்டகாலமாக சம்பள உயர்வின்மை, பதவி உயர்வு ஃ பதவி நிலை தொடர்பான முறையான நடைமுறையின்மை, சீரான கடமைப்பட்டியல் இன்மை மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் வழங்கப்படாமை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வரும் அபிவிருத்தி…
The post வடமாகாணத்தில் சுகயீன விடுமுறைப் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமாகாணத்தில் சுகயீன விடுமுறைப் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
