ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக வர்த்தக அமைச்சின் செயலாளர் பதவி நீக்கம்
4 view
வர்த்தக அமைச்சின் செயலாளராக இருந்த பத்ராணி ஜயவர்தன, திறமையின்மை மற்றும் ஊழல் மோசடிகள் காரணமாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக வர்த்தக அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை சரியான முறையில் முகாமைத்துவம் செய்யவோ அல்லது வழிநடத்தவோ முடியாமல் போனமையால் மக்கள், ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் அதிருப்தி காரணமாக ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பத்ராணி ஜயவர்தன வர்த்தக அமைச்சின் செயலாளராக இருப்பதுடன், பல நிறுவனங்களின் தலைவியாகவும், பல நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். மஹாபொல நெட்வெல்த் நிறுவனம் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் தேசிய சேமிப்பு வங்கி, மக்கள் வங்கி, அபிவிருத்தி லொத்தர் சபை மற்றும் மஹாபொல நிதிச் சபை ஆகியவற்றின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அதற்கமைவாக, அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியாமல் பொதுமக்களுக்கு ஏற்படும் தொடர்ச்சியான அசௌகரியங்களுக்கு நாட்டின் முக்கிய அமைச்சுக்களில் ஒன்றான வர்த்தக…
The post ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக வர்த்தக அமைச்சின் செயலாளர் பதவி நீக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக வர்த்தக அமைச்சின் செயலாளர் பதவி நீக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
