கோட்டாவைக் காப்பாற்ற மஹிந்தவை பதவி விலக கோரும் பொதுஜன எம்.பிக்கள்! – சந்திரிகா குற்றச்சாட்டு
4 view
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காகவே பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் கோரி வருகின்றனர். ஒருவரை மட்டும் பதவி விலகக் கோரும் இந்தச் சுயலாப அரசியல் கோரிக்கை ஏற்கத்தக்கது அல்ல. வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் ஒரே தடவையில் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கோட்டாபயவும் மஹிந்தவும் பதவி விலக வேண்டும் எனக் கோரியே ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும் அலரி மாளிகைக்கு முன்பாகவும் இரவு பகலாக மக்கள் போராடி வருகின்றனர். மக்கள் ஆணையின் பிரகாரம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியும் பிரதமரும் மக்களின் இந்தக் கோரிக்கைக்குச் செவிசாய்க்க வேண்டும். காலம் தாழ்த்தாது கெளரவமாக இருவரும் பதவி விலகி புதிய ஆட்சிக்கு வழிவிட…
The post கோட்டாவைக் காப்பாற்ற மஹிந்தவை பதவி விலக கோரும் பொதுஜன எம்.பிக்கள்! – சந்திரிகா குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோட்டாவைக் காப்பாற்ற மஹிந்தவை பதவி விலக கோரும் பொதுஜன எம்.பிக்கள்! – சந்திரிகா குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
