சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தோண்டியெடுப்பு!
4 view
பாறுக் ஷிஹான்) உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதல்களை தொடர்ந்து அம்பாறையின் சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்காக இன்று (27) காலை அம்பாறை புத்தங்கல பொது மயானத்தில் தோண்டி எடுக்கப்பட்டன. மூன்றாவது தடவையாக மேற்கொள்ளப்படவுள்ள இப்பிரேத பரிசோதனையானது அம்பாறை பிரதான மாவட்ட நீதிபதி மற்றும் நீதிவானுமாகிய லுசாகா குமாரி தர்மகீர்த்தி முன்னிலையில் சட்ட வைத்திய அதிகாரிகளான என்.டபிள்யூ தினுகா மதுஷானி மற்றும் ருச்சிர நதீர ஆகியோருடன் இரசாயன பகுப்பாய்வாளர் வனிதா பண்டாரநாயக்க தடயவியல் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பிரசன்னத்துடன் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியின் மனைவி புலஸ்தினி மகேந்திரன் (சாரா ) என்பவர் தொடர்பான டிஎன்ஏ பரிசோதனைக்காக சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். ஸஹ்ரான் ஹாஷிமின் சகோதரரால் 26.04.2019 இரவு சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட…
The post சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தோண்டியெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தோண்டியெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
