கஞ்சிக்குடியாறு மீனவர்களுக்கு மீன்பிடி வள்ளங்கள் கையளிப்பு!
13 view
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் கஞ்சிக்குடியாறு கிராமத்தில் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக, கஞ்சிக்குடியாறு கிராமிய கூட்டுறவு சங்கம் ஊடாக வள்ளங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 26.04.2022, அன்று மிகச்சிறப்பாக நடை பெற்றது. இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலக செயலாளர் திரு கஜேந்திரன் அவர்களின் தலைமையிலும் , கிராம சேவகர் திரு நிரோஷன் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் நடந்தேறியது. இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலக செயலாளர் திரு கஜேந்திரன் , உதவி பிரதேச செயலாளர் சதிசேகரன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு விஜயன் ,மீன்வளர்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ரவிக்குமார்,கஞ்சிக்குடியாறு மீனவ சங்க தலைவர் திரு. மகேந்திரன் , கிராம சேவகர் திரு. நிரோஷன் மற்றும் கஞ்சிக்குடியாறு கிராமிய கூட்டுறவு சங்கத்தலைவர் குகதீபன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் கனடாவில் இருந்து சர்வதேச ஐக்கிய மகளிர் கூட்டமைப்பின் சர்வதேச பணிப்பாளர் திருமதி சுபாங்கி அவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தது…
The post கஞ்சிக்குடியாறு மீனவர்களுக்கு மீன்பிடி வள்ளங்கள் கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கஞ்சிக்குடியாறு மீனவர்களுக்கு மீன்பிடி வள்ளங்கள் கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
