புகையிரத சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும்! – புகையிரத ஒன்றிணைந்த சேவை சங்கம் எச்சரிக்கை

14 view
அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டத்தை பலப்படுத்தும் வகையிலும், ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலும் புதன்கிழமை நள்ளிரவு முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம். நாளைபுகையிரத சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும் என புகையிரத ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் செயலாளர் எஸ்.பி விதானகே தெரிவித்தார். பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் புகையிரத சேவையை பயன்படுத்தும் பொதுபயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். நாட்டுக்காக ஒருசில கடினமான தீர்மானங்களை முன்னெடுக்க நேரிடும். நாட்டுக்கான எமது போராட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மருதானையில் உள்ள புகையிரத ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தின் விளைவை நாட்டு மக்கள் தற்போது எதிர்க்கொள்கிறார்கள். வரிசையில் நின்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை தற்போது…
The post புகையிரத சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும்! – புகையிரத ஒன்றிணைந்த சேவை சங்கம் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース