சாய்ந்தமருது குண்டுவெடிப்பு – உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளன!
5 view
அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்றைய தினம் மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளன. கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தியவரான மொஹமட் ஹஸ்துன் என்பவரின் மனைவியான சாரா ஜெஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரனின் மரபணுவை அடையாளம் காண்பதற்காக குறித்த உடற்பாகங்கள் மீள தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அம்பாறை நீதவானின் கண்காணிப்பில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி, அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் விசாரணை அதிகாரிகளும் இதன்போது பிரசன்னமாகவுள்ளனர். ஏப்ரல் 21 தாக்குதலை அடுத்து, பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிற்கு மத்தியில், 2019 ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 17 பேர் பலியானதாக கூறப்பட்டபோதிலும் 16 பேரின் உடற்பாகங்களே மீட்கப்பட்டன. சாரா ஜெஸ்மின் என்ற புலஸ்தினி…
The post சாய்ந்தமருது குண்டுவெடிப்பு – உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளன! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாய்ந்தமருது குண்டுவெடிப்பு – உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளன! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
