பதவியை தக்கவைக்க ஜனாதிபதி, பிரதமர் கடும் பிரயத்தனம்!

35 view
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நாளுக்கு நாள் உக்கிரமடைந்துவருவதால் அரசியல் களமும் கொதிநிலையிலேயே காணப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டில் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவந்தாலும், பதவி துறப்பதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் மறுப்பு தெரிவித்துவிட்டனர். மக்களும் பின்வாங்குவதாக இல்லை. இந்நிலையில் தனது பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவருகின்றார். மூத்த உறுப்பினர்களை ஓரங்கட்டிவிட்டு, இளம் உறுப்பினர்களை அமைச்சரவைக்கு உள்வாங்கினார். அத்துடன், மஹிந்த – பஸில் தரப்பின் கடும் எதிர்ப்பையும்மீறி – புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் இடைக்கால அரசை நிறுவுவதற்குகூட கோட்டாபய ராஜபக்ச பச்சைக்கொடி காட்டியுள்ளார். மறுபுறத்தில் மஹிந்த மற்றும் பஸில் ராஜபக்ச தரப்பு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையையும், ஆட்சியையும் தக்கவைத்துக்கொள்வதற்கு பெரும்பாடுபடுகின்றது. அரசமைப்பில் திருத்தம் மேற்கொண்டு, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் ஊடாக நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கு அத்தரப்பு திட்டம் தீட்டியது. ஆனால்…
The post பதவியை தக்கவைக்க ஜனாதிபதி, பிரதமர் கடும் பிரயத்தனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース