4,860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது லிட்ரோ எரிவாயு
5 view
இன்று (செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் (12.5kg) விலை 4 ஆயிரத்து 860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக லிட்ரோ 12.5 கிலோகிராம் எரிவாயுவின் புதிய விலை 2,675 ரூபாவாகவும், 5 கிலோ லிட்ரோ எரிவாயுவின் விலை 1,071 ரூபாவாகவும், 2.3 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 506 ரூபாவாகவும் காணப்பட்டது. இதேவேளை, கடந்த 22 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோ எரிவாயு கொள்கலன் விலையை 5175 ரூபாவாக அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்திருந்தது. எனினும், பின்னர் அதற்கு அனுமதி வழங்கமுடியாது எனத்தெரிவித்து குறித்த விலை அதிகரிப்பை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post 4,860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது லிட்ரோ எரிவாயு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 4,860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது லிட்ரோ எரிவாயு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
