சட்டத்துக்கு விரோதமாகவே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது! நாடாளுமன்றில் சர்ச்சை
4 view
நிதி அமைச்சரின் அனுமதி இல்லாமலே எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் எரிபொருள் விலை அதிகரிப்பு சட்ட விரோமாகும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சட்டத்தின் பிரகாரம் நிதி அமைச்சரின் அனுமதி இல்லாமல் எரிபொருட்களின் விலை அதிகரிக்க முடியாது. ஆனால் கடந்த 17ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டும்போது நிதி அமைச்சர் நாட்டில் இருக்கவில்லை. அவருக்கு பதில் அமைச்சராக யாரும் நியமிக்கப்பட்டும் இருக்கவில்லை. அப்படியானால் எவ்வாறு விலை அதிகரிக்க முடியும் என கேட்கிறேன் என்றார். இதற்கு மின் சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பதிலளிக்கையில், எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன். அதேநேரம் நிதி அமைச்சருக்கும் தொலை பேசி ஊடாக அறிவுறுத்தினோம். எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கும் இதுதொடர்பாக அறிவுறுத்தியிருந்தோம். ஜனாதிபதி, நிதி…
The post சட்டத்துக்கு விரோதமாகவே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது! நாடாளுமன்றில் சர்ச்சை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டத்துக்கு விரோதமாகவே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது! நாடாளுமன்றில் சர்ச்சை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
