மக்கள் எழுச்சிக்கு எதிரான அடக்குமுறையை கண்டிக்கிறோம் – யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம்
4 view
மக்கள் எழுச்சிக்கு எதிரான ஆயுதரீதியான அடக்குமுறையை கண்டிக்கிறோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ரம்புக்கணையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், ”எமது நாட்டின் ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மை மற்றும் ஊழல் ஆட்சி முறைமை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் நாடு தழுவிய முழுமையான அரசியல் மாற்றத்தைக்கோரி இன, மத பேதமின்றி ஜனநாயக வழியில் மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முழுமையான ஆதரவை நல்குகின்றோம். இப்போராட்டங்களின் தொடர்ச்சியாக ரம்புக்கணையில் 19.04.2022 அன்று நடைபெற்ற மக்களின் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் பொலீசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்து பலர் காயமடைந்த சம்பவத்திற்கு எமது கண்டனங்களை தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை ஆயுத ரீதியாக அடக்க முற்படும் போது அது மேலும் வீரியம் அடைந்து விரிவடையும் என்பதை…
The post மக்கள் எழுச்சிக்கு எதிரான அடக்குமுறையை கண்டிக்கிறோம் – யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் எழுச்சிக்கு எதிரான அடக்குமுறையை கண்டிக்கிறோம் – யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
