ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது பிரித்தானியா!
14 view
ரஷ்ய இராணுவ ஜெனரல்கள் மற்றும் ரஷ்ய ஆயுதப்படைகளுக்கு ஆதரவளிக்கும் 26 தனிநபர்கள் மற்றும் வணிகங்களை குறிவைத்து பிரித்தானியா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இராணுவத் தலைவர்கள், பாதுகாப்பு நிறுவனங்களை குறிவைத்து விதிக்கப்பட்ட இந்த புதிய தடைகள், ரஷ்ய இராணுவத்தை ஆதரிப்பவர்களுக்கும் பொருந்தும் இந்த தடையின் மூலம், ரஷ்ய பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் இகோர் கோனஷென்கோவ், விமானப்படையினர் கமாண்டர் ஆன்ரி செர்டிகோவ், இராணுவ நிபுணர் இகோர் கோரோட்சென்கோ, ரஷ்ய ரயில்வே தலைமைச் செயல் அதிகாரி ஓலெக் பெலோஸ்ரோவ் உள்ளிட்டோரின் சொத்துகள் மற்றும் அவர்கள் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல காலநிஷிகோவ் ரொக்கெட் ஸ்பேஸ் சென்டர் உள்ளிட்ட நிறுவனங்களின் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு மேற்குலகின் பிரதிபலிப்பில் முக்கிய பங்கு வகிக்க, ஏற்கனவே நூற்றுக்கணக்கான பொருளாதாரத் தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது இதில் புடின் உட்பட அரசியல்வாதிகள் மீதான சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் அடங்கும். சமீபத்திய…
The post ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது பிரித்தானியா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது பிரித்தானியா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
