56ஆவது நாளாக தொடரும் போர்: உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!
31 view
கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள், அங்குள்ள துறைமுக பகுதியான மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ளது. இதனை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நகரை ரஷ்ய படைகள், கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அத்துடன், மரியுபோல் நகரை கைப்பற்றியதற்காக ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், பாராட்டு தெரிவிததார். மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் கைப்பற்றுமாறு இராணுவத்தினருக்கு புடின் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார் என்பது நினைவுக்கூறத்தக்கது. முன்னதாக மரியுபோல் நகரத்திற்குள் இருக்கும் உக்ரைன் வீரர்கள் தங்களுடைய ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு உடனடியாக சரணடைய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது மரியுபோல் நகரை ரஷ்ய படைகள், கைப்பற்றியுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து குறைந்தது 2,500க்கும் மேற்பட்டோர் மரியுபோலில் கொல்லப்பட்டதாகக் உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த எண்ணிக்கை அதிகமாக…
The post 56ஆவது நாளாக தொடரும் போர்: உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 56ஆவது நாளாக தொடரும் போர்: உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
