புலஸ்தினியை பார்த்ததாக கூறிய சாட்சியை காணவில்லை – அரசாங்கம் அறிவிப்பு

5 view
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய தற்கொலை குண்டுதாரி முஹம்மது ஹஸ்துனின் மனைவியான புலஸ்தினி ராஜேந்திரன் எனப்படும் சாரா ஜஸ்மினை தான் பார்த்ததாக கூறிய சாட்சியை காணவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நாடாளுமன்றில் இதனை தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அவர் இதனை கூறியுள்ளார். “2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் குறிப்பிட்ட நபர் காணாமல் போயிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். “தற்போது, ​​உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக 735 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 196 பேர் சிறையில் உள்ளனர். மேலும், 19 சந்தேக நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 81 சந்தேக நபர்களுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதுடன், அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 453 சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 25,753…
The post புலஸ்தினியை பார்த்ததாக கூறிய சாட்சியை காணவில்லை – அரசாங்கம் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース