மக்கள் போராட்டம் இனவாதத்தை நோக்கி நகர்கின்றதா?
4 view
கலாநிதி எம்.சி. ரஸ்மின் மார்ச் 31ஆம் திகதி தொடங்கிய மக்கள் போராட்டம் இன்று வரை சுயாதீனமாக இடம்பெற்று வருகின்றது. மக்களின் ஏகோபித்த சுய எழுச்சியாக அமைந்த, வன்முறையற்ற இப்போராட்டம் புதிய ஒரு குடியுரிமைக் கலாசாரத்தை தோற்றுவித்துள்ளது. மேல்வர்க்க மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் வரை இவ்வாறான ஒன்று சாத்தியப்படவில்லை. பேராசிரியர் ஜயதேவ உயன்கொட குறிப்பிடுவது போன்று, இரண்டுவாரங்களாக இடம்பெறும் இப்போராட்டம் ‘மக்கள் வளாகம்’ஒன்றை தோற்றுவித்துள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளும் பொதுமக்களும் இனிமேல் இனவாதம் எடுபடாது என்ற ஒரு சுலோகத்தை முன்வைக்கின்றனர். இது ஒரு நல்ல சுலோகம் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த அரசாங்கம் இனவாதம், சமயவாதம், பெரும்பான்மை சிறுபான்மை பாகுபாடு என்பனவற்றை முன்னிறுத்தி மக்களை துண்டாடிவிட்டதுஎன்றும் மக்கள் ஏமாந்து விட்டார்கள் என்றும் ஆத்திரத்துடன் பேசப்படுகின்றது. இப்போது சமூகங்களை பிரித்தாளும் அரசாங்கத்தின் சூழ்ச்சி புரிந்துவிட்டது. முஸ்லிம் மக்கள் எமது உடன்பிறப்புகள் இந்த நாட்டில் அவர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுவிட்டது. அவர்களும் இந்நாட்டில் வாழும் சம உரிமை…
The post மக்கள் போராட்டம் இனவாதத்தை நோக்கி நகர்கின்றதா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் போராட்டம் இனவாதத்தை நோக்கி நகர்கின்றதா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
