கயவர்களுக்கு வாக்களித்து தவறிழைத்து விட்டோம்! மக்களிடம் மன்னிப்பு கோரிய ரிஷாட்
5 view
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், 300க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அப்பாவிகளான அவர்களை சிறைகளில் வைத்துக்கொண்டு, உங்கள் இருப்புக்காக அரசியல் செய்கிறீர்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், மிகவும் காரசாரமாக பேசினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலோடு தொடர்புபடுத்தி, முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் மெளலவிகளும் சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவர்களை, விசாரணை நடத்துங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள். அவர்களை இந்த மூன்று ஆண்டுகளாக வைத்து அரசியல் நடத்தும் நீங்கள் நாசமாகி விடுவீர்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்பு 30 பள்ளிவாசல்களுக்கு மேல் அடித்து நொறுக்கப்பட்டன. காடைத்தனம்களிலே ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படவும் இல்லை, தண்டிக்கப்படவும் இல்லை. டாக்டர் சாபியை போய் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து தடுத்து வைத்தீர்கள். எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி…
The post கயவர்களுக்கு வாக்களித்து தவறிழைத்து விட்டோம்! மக்களிடம் மன்னிப்பு கோரிய ரிஷாட் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கயவர்களுக்கு வாக்களித்து தவறிழைத்து விட்டோம்! மக்களிடம் மன்னிப்பு கோரிய ரிஷாட் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
