இலங்கையர்களுக்கு 1585 ஹஜ் கோட்டா
14 view
(ஏ.ஆர்.ஏ.பரீல்)சவூதி அரேபியாவின் ஹஜ் விவகாரங்களுக்கான அமைச்சு இவ்வருடம் இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்காக 1585 ஹஜ் கோட்டாக்களை ஒதுக்கியுள்ளது. கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் கொவிட் 19 வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக இலங்கைக்கு ஹஜ் கோட்டா ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இலங்கைக்கு இவ்வருடம் 1585 ஹஜ் கோட்டா ஒதுக்கப்பட்டுள்ளதாக உத்தியோகப் பற்றற்ற முறையில் அறியக்கிடைத்துள்ளதாகவும் சவூதி அரேபிய ஹஜ் அமைச்சின் உத்தியோகபூர்வ அறிவிப்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றதும் அது தொடர்பில் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவிக்கும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இப்றாஹிம் அன்சார் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் ஏற்கனவே பதிவு செய்து ஹஜ் யாத்திரைக்கு திட்டமிட்டிருப்பவர்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைக்கும் வரை காத்திருக்கும் படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வருடத்துக்கான ஹஜ் முகவர்கள் நியமனம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அதனால் ஹஜ் யாத்திரிகர்கள் எவருக்கும் முற்பணம் செலுத்த வேண்டாமெனவும்…
The post இலங்கையர்களுக்கு 1585 ஹஜ் கோட்டா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையர்களுக்கு 1585 ஹஜ் கோட்டா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
